[ad_1]
Last Updated:
பயிற்சியின்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிந்திருக்கும் வாட்ச் தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிந்திருக்கும் வாட்ச்சின் விலை ஆசிய கோப்பை தொடரை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசை விடவும் 8 மடங்கு அதிகம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த 8 அணிகள் இந்தப் போட்டியில் விளையாடுகின்றன. 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் அணிகள் உள்ளன. குரூப் சுற்று, அதனைத் தொடர்ந்து சூப்பர் ஃபோர், அடுத்ததாக ஃபைனல் என மூன்று கட்டங்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட உள்ளது.
இந்த முறை உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் t20 ஃபார்மெட்டில் நடத்தப்பட உள்ளது. இதில் கோப்பையை வெல்லும் அணிக்கு 2 கோடியே 60 லட்சம், இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாயும் காசோலையாக வழங்கப்படும்.
இந்நிலையில் பயிற்சியின்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிந்திருக்கும் வாட்ச் தற்போது வைரலாகி வருகிறது. ஏனென்றால் அந்த வாட்ச்சின் மதிப்பு ஆசிய கோப்பை தொடரில் வின்னருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை விடவும் சுமார் 8 மடங்கு அதிகம்.
September 09, 2025 9:50 PM IST