[ad_1]
Last Updated:
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் தொடக்க வீரர் செதிகுல்லா அடல் 52 பந்துகளில் 3 சிக்சர் 6 பவுண்டரியுடன் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள ஆப்கன் அணி 20 ஓவர்கள் முடிவில் ரன்கள் எடுத்துள்ளது.
ஆசியாவை சேர்ந்த 8 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வண்ணமயமாக தொடங்கியது. தொடக்க ஆட்டம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையே அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இரவு 8 மணியளவில் ஆரம்பித்தது.
டாஸ் வென்ற ஆப்கன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக செதிகுல்லா அடல் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் களம் இறங்கினர். குர்பாஸ் 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இப்ராகிம் ஜத்ரான் 1 ரன்னும், முகமது நபி 33 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய அஸ்மதுல்லா ஒமர்சார் 21 பந்துகளில் 5 சிக்சர் 2 பவுண்டரியுடன் 53 ரன்கள் குவித்தார்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் தொடக்க வீரர் செதிகுல்லா அடல் 52 பந்துகளில் 3 சிக்சர் 6 பவுண்டரியுடன் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
September 09, 2025 10:02 PM IST