[ad_1]
Last Updated:
இந்திய அணி நாளை ஐக்கிய அரபு அமீரகத்தையும், வரும் 14ஆம் தேதி பாகிஸ்தான் அணியும், 19ஆம் தேதி ஓமன் அணியையும் எதிர் கொள்கிறது.
கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த 8 அணிகள் இந்தப் போட்டியில் விளையாடுகின்றன. 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் அணிகள் உள்ளன.
குரூப் சுற்று, அதனைத் தொடர்ந்து சூப்பர் ஃபோர், அடுத்ததாக ஃபைனல் என மூன்று கட்டங்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன.
இந்த முறை உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் t20 ஃபார்மெட்டில் நடத்தப்பட உள்ளது. இதில் கோப்பையை வெல்லும் அணிக்கு 2 கோடியே 60 லட்சம், இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாயும் காசோலையாக வழங்கப்படும்.
முன்னதாக 2023 ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மேட்டில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தத் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 1 கோடியே 25 லட்ச ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.
September 09, 2025 5:13 PM IST