[ad_1]
Last Updated:
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள லெஸ்லிகஞ்ச் (Lesliganj) பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், மிகுந்த வறுமை காரணமாக தங்களுக்குப் பிறந்த 1 மாதமேயான கைக்குழந்தையை ரூ.50,000க்கு விற்ற தகவல் தங்களுக்குக் கிடைத்ததாக லெஸ்லிகஞ்ச் வட்ட அதிகாரி சுனில் குமார் சிங் தகவல் கூறி உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களுக்குப் பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை ரூ.50,000-க்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநில காவல்துறையினரால் அந்தக் கைக்குழந்தை மீட்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வறுமையால் பாதிக்கப்பட்ட பெற்றோர் குறிப்பிட்ட கைக்குழந்தையை பணத்திற்காக விற்ற தகவலை அறிந்த மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உடனடியாக அந்தக் குழந்தையை மீட்க போலீசாருக்கு உத்தரவிட்டதை அடுத்து, போலீசார் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பலாமு மாவட்டத்தில் உள்ள லெஸ்லிகஞ்ச் (Lesliganj) பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், மிகுந்த வறுமை காரணமாக தங்களுக்குப் பிறந்த 1 மாதமேயான கைக்குழந்தையை ரூ.50,000க்கு விற்ற தகவல் தங்களுக்குக் கிடைத்ததாக லெஸ்லிகஞ்ச் வட்ட அதிகாரி சுனில் குமார் சிங் தகவல் கூறி உள்ளார். இந்த விஷயம் வெளியே தெரிந்த உடனேயே பலாமு மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட அந்தப் பெற்றோரைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு 20 கிலோ உணவு தானியங்களை வழங்கியதோடு, நலத்திட்டங்களின் கீழ் அவர்களைச் சேர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கியதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
ஒரு மாத ஆண் குழந்தையின் தந்தையான ராமச்சந்திர ராம், தனது கைக்குழந்தையை அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு பண வசதி படைத்த தம்பதியினருக்கு விற்றதாகக் கூறினார். குழந்தை பிறந்ததில் இருந்து உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது மனைவி பிங்கி தேவி-க்கு சிகிச்சை அளிக்க மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பணம் இல்லாததால் தங்களுக்குப் பிறந்த குழந்தையை விற்க முடிவெடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் ராமச்சந்திர ராம்.
தனது மோசமான நிலை குறித்துப் பேசியிருக்கும் தினசரி கூலித் தொழிலாளியான ராமச்சந்திர ராம், “பிரசவத்திற்குப் பின் எனது மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமானது, அவருடைய சிகிச்சைக்கோ அல்லது அவருக்குச் செலவு செய்யவோ, உணவு ஏற்பாடு செய்யவோ என்னிடம் பணம் இல்லை. மேலும், கடந்த சில மாதங்களாக அங்கு பெய்துவரும் இடைவிடாத மழை காரணமாக தனக்கு உரிய வேலை கிடைக்கவில்லை” எனவும் கூறியுள்ளார்.
“நாங்கள் வீடற்றவர்கள், எங்கள் நான்கு குழந்தைகளுடன் ஒரு பாழடைந்த கொட்டகையில்தான் தங்கி எங்கள் இரவுகளைக் கழிக்கிறோம்” என்றும் கூறியுள்ளார். பணம் கொடுத்தபின்னர் இடைத்தரகர் ஒருவர் தம்பதியினர் மற்றும் அவர்களின் குழந்தையை லதேஹர் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தையை கண்டுபிடித்து மீட்க லதேஹருக்கு ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டது, பின்னர் வெற்றிகரமாக குழந்தை மீட்கப்பட்டதாக லெஸ்லிகஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் உத்தம் குமார் ராய் தெரிவித்துள்ளார்.
ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இல்லாததால் அரசின் நலத்திட்டங்களை இந்த தம்பதியினரால் பெற முடியவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக அந்தத் தம்பதிக்கு ஆதார் மற்றும் ரேஷன் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே பிங்கி தேவி தனது தந்தை தனக்கு ஒரு சிறிய நிலத்தை கொடுத்ததாகவும், அவர்கள் அதில் ஒரு குடிசையை கட்டியதாகவும், ஆனால் அது மழையில் சேதமடைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். “ஷெட்டின் கீழ் வாழ்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” எனவும் ராம் தெரிவித்துள்ளார்.
September 09, 2025 5:43 PM IST
மிகுந்த வறுமை காரணமாக பெற்றோரால் ரூ.50,000-க்கு விற்கப்பட்ட ஒரு மாத குழந்தை…! அடுத்து நடந்தது என்ன…?