[ad_1]
Last Updated:
தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே அதிகமான எண்ணிக்கையில் கூடினார்கள்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நள்ளிரவில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவர் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். அவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார். 2027-ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு அவர் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்ற திட்டத்தில் மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலியும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார். அதற்கு முன்பாக ரோகித் சர்மா உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா நேற்று நள்ளிரவில் மருத்துவமனைக்குச் சென்றார்.
இது குறித்து தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே அதிகமான எண்ணிக்கையில் கூடினார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.
மும்பை மருத்துவமனை வளாகத்தில் கூடிய ரசிகர்கள் ரோஹித் சர்மாவை வீடியோ எடுத்துக் கொண்டு அவரை வாழ்த்தி முழக்கங்களை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மாவுக்கு என்ன மாதிரியான பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்பது உறுதி செய்யப்படவில்லை. தற்போது ரோஹித் சர்மா மருத்துவமனைக்குச் சென்றது குறித்த வீடியோக்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
September 09, 2025 4:52 PM IST