[ad_1]
கோலாலம்பூர்:
இங்கிலாந்தைச் சேர்ந்த கோவென்ட்ரி பல்கலைக்கழகம் (Coventry University) நடத்திய ஆய்வு ஒன்றில் அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் (surgical masks) வடிகட்டி முகக்கவசங்கள் (filtering facepieces) உட்பட, பயன்படுத்தப்படாத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள், தண்ணீரில், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களையும் (microplastics), தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களையும் வெளியிடுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆய்வாளர்கள், பயன்படுத்தப்படாத முகக்கவசங்களை, 24 மணி நேரம், சுத்தமானத் தண்ணீரில் வைத்தனர். வடிகட்டி முகக்கவசங்கள், சாதாரண முகக்கவசங்களை விட, மூன்று முதல் நான்கு மடங்கு, அதிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை வெளியிடுவதைக் கண்டறிந்தனர். இந்தத் துகள்கள், பெரும்பாலும், பாலிபுரோப்பிலீன் (polypropylene) என்ற பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்தவை. இருப்பினும், பாலிஎதிலீன் (polyethylene), பாலியஸ்டர் (polyester), நைலான் (nylon) மற்றும் பி.வி.சி. (PVC) போன்ற, மற்றப் பிளாஸ்டிக் வகைகளும், இதில் இருந்தன.
இந்த நுண்ணிய துகள்கள், மனித முடியின் அகலத்தை விட, சிறியவை. இவை, சுற்றுச்சூழலில், நீண்ட காலம் நிலைத்திருக்கும். இதனால், வனவிலங்குகள், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு, அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மேலும், ஹார்மோன்களைச் சீர்குலைக்கக்கூடிய, பிஸ்பெனால் பி (Bisphenol B) போன்ற இரசாயனங்கள், இந்த முகக்கவசங்களில், கண்டறியப்பட்டுள்ளன.
இது, நீர்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பதுடன், மனித உணவுச் சங்கிலியிலும், நுழையக்கூடும். பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் மட்டுமல்லாது, பயன்படுத்தப்படாத முகக்கவசங்களும், சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை விளைவிப்பதாக, இந்த ஆய்வு, கவலையை ஏற்படுத்தியுள்ளது.