[ad_1]
Last Updated:
வாகனங்களின் விலை குறைப்பு பட்டியலை விற்பனை மையங்களில் சுவரொட்டியாக ஒட்ட வேண்டும் என்று வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை தொடர்ந்து வாகனங்களின் விலை குறைப்பு பட்டியலை விற்பனை மையங்களில் சுவரொட்டியாக ஒட்ட வேண்டும் என்று வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பின்படி கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டர் வாகனங்களுக்கான வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, டாடா, மகேந்திரா, மாருதி சுசுகி, இருசக்கர வாகன நிறுவனங்களான பஜாஜ், ஹோண்டா, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்துள்ளன
குறிப்பாக கியா கார்னிவல் கார் விலை 48 ஆயிரத்து 513 ரூபாய் குறைக்கப்பட்டு 4 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. ஜேஎஸ்டபிள்யு – எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது வாகனங்கள் விலையை 54 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முன்பும், பின்பும் வாகனங்கள் எந்த விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்து விற்பனை மையங்களில் சுவரொட்டி ஒட்டும்படி மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்த சுவரொட்டிகளில் பிரதமர் மோடி படம் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
September 09, 2025 10:58 AM IST
ஜிஎஸ்டி குறைப்பு.. “கார் ஷோரூம்களில் பிரதமர் மோடி படம் இடம்பெற வேண்டும்..” மத்திய அரசு அறிவுறுத்தல்!