[ad_1]
சிராங்கூனில் லாரி காருடன் மோதிய சம்பவத்தில் மது போதையில் லாரி ஓட்டியதாக 30 வயதுமிக்க ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் செப்.7 ஆம் தேதி மாலை சென்ட்ரியம் சதுக்கத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நான்கு வெளிநாட்டு ஊழியர்கள் கைது: 644 ஊழியர்களிடம் சோதனை
அப்பர் சிராங்கூன் சாலையை நோக்கிச் செல்லும் சிராங்கூன் சாலையில் நடந்த இந்த விபத்து குறித்து அன்றிரவு 8.55 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் 49 வயதுமிக்க பெண் ஒருவர் காரை ஓட்டி வந்தார் என்றும், அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சட்டம்
மது போதையில் வாகனம் ஓட்டும் குற்றத்திற்கு S$2,000 முதல் S$10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே தவறு செய்தால் S$20,000 வரை அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
The post சிராங்கூனில் லாரி காருடன் மோதல்.. மது போதையில் இருந்த லாரி ஓட்டுநர் கைது appeared first on Tamil Daily Singapore.