[ad_1]
Last Updated:
இப்போட்டிகளில், இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய 4 அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் ஆகிய 4 அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
ஆசியக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கும் நிலையில் இந்திய அணி நாளை தனது முதல் போட்டியில் விளையாடுகிறது.
ஆசியக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கும் நிலையில் இந்திய அணி நாளை தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அபுதாபியில் இன்று தொடங்குகிறது.
அடுத்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில், ஆசிய கோப்பை போட்டிகளும், டி-20 வடிவில் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில், இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய 4 அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் ஆகிய 4 அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா அபுதாபியில் இன்று நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, நடைபெறும் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி, இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
மிகவும் பரபரப்பான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகிற 14ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குரூப் சுற்றில் கடைசியாக இந்திய அணி ஓமனை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி 19ஆம் தேதி நடக்கிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
September 09, 2025 12:54 PM IST