[ad_1]
சிங்கப்பூர்: டோசன் சாலையில் (Dawson Road) உள்ள புளாக் 88 இன் கீழ் பகுதியில் 50 வயதுடைய ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 7.25 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் நான்கு வெளிநாட்டு ஊழியர்கள் கைது: 644 ஊழியர்களிடம் சோதனை
அந்த ஆடவர் புளாக்கின் அடிவாரத்தில் அசைவில்லாமல் கிடந்தார், மேலும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை (SCDF) துணை மருத்துவர்கள் குழு அவர் இறந்ததை சம்பவ இடத்திலேயே உறுதி செய்து அறிவித்தது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் எந்த சதி வேலையும் நடக்கவில்லை என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து Stomp தளம் கூறுகையில்; அவர் உயரத்திலிருந்து விழுந்திருக்கலாம் என அதன் வாசகர் சந்தேகித்தார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் ஒரு நீல நிற கூடாரம் அமைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததாக அவர் சொன்னார்.
ஆனால் அதனை புகைப்படங்கள் எடுக்க காவல்துறை அனுமதிக்கவில்லை என்றும் வாசகர் கூறினார்.
“காவல்துறையினர் அங்கு வரும் முன்னர், பெண் ஒருவர் அந்த உடலைப் பார்த்து கதறி அழுது கொண்டிருந்தார்” என்றும் அவர் சொன்னார்.
விசாரணைகள் தொடர்கின்றன.
இது டோசன் எஸ்டேட்டில் நடந்த மூன்றாவது மரணம் என stomp கூறியுள்ளது. கடந்த ஆண்டு டிச. மற்றும் இந்த ஆண்டு பிப். ஆகிய மாதங்களில் மற்ற இரு மரணங்கள் நடந்தன.