[ad_1]
Last Updated:
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்ததை அடுத்து, தடையை ரத்து செய்வதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டத்திற்கு அரசு பணிந்த நிலையில், கலவரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே, போராட்டத்தின் போது நடந்த கலவத்தை விசாரிக்க குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 19 பேர் உயிரிழந்ததாகவும், 350க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கூடிய இளைஞர்களைக் கலைக்க ரப்பர் குண்டுகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பயன்படுத்தினர். அரசுக்கு எதிராக பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி தாக்குதலில் 19 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இளைஞர்கள் பெரும் போராட்டத்தை அடுத்து, சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. ஆன்லைன் தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பதிவு செய்வதற்காக அரசு விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது. இதை கண்டித்து, ‘GEN Z’ புரட்சி என்ற பெயரில் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.
September 09, 2025 8:00 AM IST
Nepal Protest | சமூக வலைதள தடைக்கு எதிராக வெடித்த போராட்டம்.. தடையை நீக்குவதாக பிரதமர் அறிவிப்பு!