[ad_1]
முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய ஆடம்பர வீட்டுத்தொகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விஜயம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் (Ananda Wijepala) நேற்று (08) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo) – 07 பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர்கள் குடியிருந்த ஏராளமான ஆடம்பர வீட்டுத் தொகுதிகள் தற்போதைக்கு கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
கண்காணிப்பு
இந்தநிலையில், குறித்த வீட்டுத் தொகுதிகள் அமைந்துள்ள பிரதேசங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு பயணமொன்றை அவர் மேற்கொண்டுள்ளார்.
இதனடிப்படையில், கொழும்பு-07 கெப்பிட்டிபொல மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதிகளை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
குறித்த பயணத்தில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |