[ad_1]
கோலாலம்பூர்:
பரபரப்பானச் சாலைகளை, விலங்குகள் பாதுகாப்பாகக் கடக்க உதவும் நோக்கில், பினாங்கு, தஞ்சோங் பூங்கா, ஜாலான் லெம்பா பெர்மாயில் (Jalan Lembah Permai), `நூமிஸ் கிராசிங்’ (Numi’s Crossing) என்ற, சிவப்பு நிற மேம்பாலம், அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பினாங்கு லாங்கூர் திட்டம் ’ (*Langur Project Penang – LPP) என்ற திட்டத்தின் கீழ், மறுசுழற்சி செய்யப்பட்டத் தீயணைப்பு குழாய்களால் (recycled fire hoses*) வடிவமைக்கப்பட்ட இந்த மேம்பாலம், இத்திட்டத்தின் இரண்டாவது மேம்பாலமாகவும் மூன்றாவது முன்மாதிரியாகவும் திகழ்கிறது.
இதற்கு முன்பு, இதேபோன்று, தெலுக் பாஹாங் (*Teluk Bahang*) பகுதியில், ஆ லாய்ஸ் கிராசிங்’ (Ah Lai’s Crossing) என்ற விலங்குகளுக்கான மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இதனிடையே, ஆய்வாளர் யாப் ஜோ லீன் (Yap Jo Leen) என்பவரால் நிறுவப்பட்ட, `பினாங்கு லாங்கூர் திட்டம் ’, வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்த, அறிவியல் தரவுகளின் அடிப்படையில், மேம்பாலங்களை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலங்கள், நிறுவப்பட்டதிலிருந்து, இவை, கருப்பு நிற லாங்கூர்களால் (dusky langurs) மட்டுமல்லாது, மக்காக் குரங்குகள், (macaques), முசாங்குகள் (musangs), லோரிஸ்கள் (lorises), பல்லிகள், அணில்கள், பறவைகள் போன்ற விலங்குகளாலும் பயன்படுத்தப்படுகின்றன.
எனவேதான், சமுதாய அறிவியல் திட்டமாக, `பினாங்கு லாங்கூர் திட்டம் ’, ஆராய்ச்சி, கல்வி, சமூக ஈடுபாடுகள் மூலம், மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையே, நல்லுறவை மேம்படுத்த முயல்கிறது.
அதுமட்டுமின்றி, பத்து ஃபெரிங்கியில் (Batu Ferringhi), டிசம்பர் மாதத்தில், மூன்றாவது மேம்பாலமும் அமைக்கப்படவுள்ளது. இது, வனவிலங்கு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கல்வி, இவை இரண்டையும், நோக்கமாகக் கொண்டுள்ளது.
The post தஞ்சோங் பூங்காவில், விலங்குகளுக்காக புதிய மேம்பாலம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.