Last Updated:
நாளை மறுதினம் நடைபெற உள்ள தனது முதல் போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
பி பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் உள்ளன. நாளை மறுதினம் நடைபெற உள்ள தனது முதல் போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.
அடுத்ததாக வரும் 14ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டிகளை சோனி நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. சோனி லைவ் சேனல்கள் மற்றும் இணையதளம், செயலிகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நேரலையாக பார்க்கலாம்.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
September 08, 2025 10:16 PM IST