[ad_1]
Last Updated:
பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் நான் பேசியபோது அழுதுவிட்டேன்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
பஞ்சாப் அணி குறித்து அவர் தெரிவித்துள்ள அதிருப்தி நிறைந்த கருத்துகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. யூனிவர்ஸ் பாஸ் என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கிறிஸ் கெயில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை விளையாடினார். அப்போது 41 போட்டிகளில் கலந்துகொண்ட கிறிஸ் கெயில் 1304 ரன்கள் குவித்தார். அவற்றில் ஒரு சதமும் 11 அரை சதங்களும் அடங்கும். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில் கூறியதாவது,
“என்னுடைய ஐபிஎல் கேரியர் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் முடிந்துவிட்டது. எனக்கு அந்த அணியில் மரியாதை கிடைக்கவில்லை. அங்கு நான் சீனியர் ஆட்டக்காரர் போன்று நடத்தப்படவில்லை. ஐபிஎல் தொடருக்கு மதிப்பை ஏற்படுத்திய வீரர் நான். ஆனால் என்னை ஒரு சிறுவனைப் போன்று பஞ்சாப் அணியில் நடத்தினார்கள்.
எனது வாழ்க்கையில் முதன்முறையாக நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன். பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் நான் பேசியபோது அழுதுவிட்டேன்.
September 08, 2025 7:04 PM IST