[ad_1]
கோலாலம்பூர்:
பினாங்கு மாநில அரசாங்கம், RM2.9 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள, வடக்கு கடற்கரை இரட்டைச் சாலைத் திட்டத்தை (North Coast Paired Road – NCPR), செயல்படுத்தவுள்ளது.
இந்தத் திட்டம், தஞ்சோங் பூங்கா (Tanjung Bungah), தெலுக் பாஹாங் (Teluk Bahang) இடையே உள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
இதனிடையே, 10.61 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலைப் பாதை, 8.41 கி.மீ. நிலப் பகுதியையும், 2.2 கி.மீ. கடற்கரைப் பாலத்தையும் (coastal viaduct) உள்ளடக்கியது.
இதன் கட்டுமானப் பணிகள், 2026-ஆம் ஆண்டு தொடங்கி, 2031-க்குள் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சாலை, உச்ச நேரங்களில், 45 நிமிடங்கள் வரையிலான பயண நேரத்தை, வெறும் ஏழு நிமிடங்களாகக் குறைக்கும்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஸய்ரில் கிர் ஜோஹாரி (Zairil Khir Johari), இந்தத் திட்டம், கன்சோர்டியம் செனித் கன்ஸ்ட்ரக்ஷன் (Consortium Zenith Construction) என்ற நிறுவனத்தால், வழிநடத்தப்படுகிறது என்றும், தற்போது, வடிவமைப்பு, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிலையில் உள்ளது என்றும், கூறினார்.
அதுமட்டுமின்றி, நிலம் கையகப்படுத்துவதற்காக, RM500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாலை, அவசர காலங்களில், விரைந்து செல்ல உதவுவதுடன், வடக்குக் கடற்கரைப் பகுதியில், சமூக-பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும், பினாங்கின் வளர்ச்சி, நிலையானதாகவும், மீள்திறன் கொண்டதாகவும் இருப்பதை, இந்தத் திட்டம், உறுதி செய்யும் என்றும், அவர் வலியுறுத்தினார்.