[ad_1]
அமெரிக்காவை சேர்ந்த ஆடவர் ஒருவர் தம் வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தபோது, பவர்பால் லாட்டரியில் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.10,000 கோடிக்கு மேல்) என்ற பிரமாண்ட தொகையை வென்றார்.
அவர் வெற்றி பெற்ற இந்த ஜாக்பாட் தொகை அவர் வசிக்கும் ஓரிகான் மாகாண வரலாற்றிலேயே மிகப்பெரியது என்றும் ஓரிகான் லாட்டரி தெரிவித்துள்ளது.
அந்த வெற்றித் தொகை அனைத்தும் அவருக்கும், அவரது மனைவி மற்றும் அவர்களது நண்பர் இடையே பிரிக்கப்பட்டது.
லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகையை வென்றால் நாம் மகிழ்ச்சியில் உறைந்து போய் செய்வதறியாது குத்தாட்டம் போடுவோம்.
ஆனால் செங் சார்லி சேபன் என்ற அவர் லாட்டரியில் வென்ற இவ்வளவு பெரிய தொகையை மகிழ்ச்சியின்றி கவலையுடன் பெற்றார்.
ஏனெனில், அவருக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, மேலும் தாம் வென்ற பணத்தை அனுபவிக்க எவ்வளவு காலம் மீதமுள்ளது என்பதும் அவருக்குத் தெரியாது.
ஓரிகான் மாநில லாட்டரி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், “இந்தப் பணத்தை எல்லாம் செலவிட எனக்கு எப்படி நேரம் கிடைக்கும்?” என்று கூறியிருந்தார்.
“நான் எவ்வளவு காலம் வாழ்வேன்?” என்பது கூட எனக்கு தெரியாது, என்று 46 வயதான அந்த ஆடவர் அப்போது கூறியிருந்தார்.
வெற்றிப் பணத்தில், பல்வேறு வசதிகள் அடங்கிய சொகுசு வீட்டையும், நியான் லம்போர்கினி காரையும் அவர் வாங்கினார், அதுகூட மகிழ்ச்சிகளற்ற சாதாரண உணர்வைக் கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய நிலவரப்படி, புற்றுநோய் அவரின் உடலில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
“இந்த உலகின் மிகவும் மதிப்புமிக்க விஷயம் என் உடல்நலம்” என்று அவர் கூறினார், ஆனால் இந்த பணத்தை கொண்டு சிறந்த மருத்துவர்களை அணுகிய அவருக்கு நான்கு மாதங்கள் மட்டுமே உயிர்வாழ அவகாசம் அளிக்கப்பட்டது.
லாவோஸில் பிறந்து அகதிகள் முகாமில் வளர்ந்த அவருக்கு, “வலியை கொடுக்கும் ஒரே விஷயம் என் உடல்நலம்” என்று கூறினார்.
“இப்போது பணத்தைப் பற்றி கவலைப்படவில்லை,” என்று கூறிய அவர், “நான் என் குடும்பத்துக்கு தேவையானதை அமைத்துக்கொடுத்துவிட்டேன்” என்றார்.
இப்போதெல்லாம், பெரும்பாலும் அவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், ஆடல், பாடல் என தம் நாட்களை கழித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”