கோலாலம்பூர்:
சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (SARA) உதவியைப் பயன்படுத்தி, பொருட்களின் விலையை உயர்த்தும் வர்த்தகர்கள் மீது, அரசாங்கம், கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிஸான் (Datuk Seri Amir Hamzah Azizan) தெரிவித்தார்.
விலையேற்றம் குறித்த புகார்கள், 2011-ஆம் ஆண்டு விலை கட்டுப்பாடு, இலாப எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், விசாரிக்கப்படும். இந்த மோசடிகள் குறித்து, உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின துறை அமைச்சின் (KPDN) அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் வாயிலாக பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், இந்த உதவித் தொகையைப் பெறுபவர்களுக்கு, சிறப்பு விலையில் பொருட்களை வழங்கும், பேரங்காடிகளையும், அரசாங்கம் பாராட்டியுள்ளது.
இதனிடையே, செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவரப்படி, இந்தத் திட்டம், சீராகச் செயல்பட்டுள்ளது. எட்டு நாட்களில், 1.7 மில்லியன் பயனீட்டாளர்களிடமிருந்து RM102.5 மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பரிவர்த்தனை நடந்துள்ளது.
எனவேதான், ஆகஸ்ட் 31-ஆம் தேதி, இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, மொத்தமாக RM745.7 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனை எட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம், 11.8 மில்லியனுக்கும் மேற்பட்ட மலேசியர்கள், பயனடைந்துள்ளது புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
The post சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (SARA) திட்டம்: விலையேற்றத்திற்கு கடும் நடவடிக்கை! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.