[ad_1]
Last Updated:
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா உட்கட்சிப் பிரச்சனை மற்றும் அமெரிக்கா வரி விதிப்பால் பதவி விலகினார்.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
ஜப்பானில் Liberal Democratic எனும் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் தலைவராக இருக்கும் ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமராக பதவியேற்றார்.
பதவியேற்றது முதலே தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார் இஷிபா. குறிப்பாக ஜூலை மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதற்கு பொறுப்பேற்று இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளுங்கட்சியிலேயே கோரிக்கை வலுத்து வந்தது.
இதேபோல், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளின் மீது அமெரிக்கா அதிக வரி விதித்தது. அதில் ஜப்பான் மீது அமெரிக்கா முதலில் 25 சதவிகிதம் வரி விதித்தது. இதன் பிறகு ஜப்பான் அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் மூலமாக அந்த வரி விதிப்பு குறைக்கப்பட்டு இறுதியாக 15 சதவிகிதம் எனும் அளவில் அமல்படுத்தப்பட்டது.
அமெரிக்க அரசின் வரி விதிப்பு, தொடர் தோல்விகளால் உட்கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் சலசலப்பு ஆகியவை பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதாக தகவல்கள் உள்ளன.
இந்த நிலையில், கட்சியின் பிளவைத் தவிர்க்கவும் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பொறுப்பேற்றும் ஷிகெரு இஷிபா பதவி விலகினார். மேலும் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்தார்.
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடான ஜப்பானில் பிரதமர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்து யார் தலைமை ஏற்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
September 07, 2025 10:06 PM IST
உட்கட்சிப் பிரச்சனை.. அமெரிக்கா வரி விதிப்பு… நெருக்கடியில் சிக்கிய ஜப்பான் பிரதமர் பதவி விலகல்