[ad_1]
Last Updated:
ஒரு சிறிய வேலையில் பணிபுரியும் இந்தியரான சந்தீப், இப்போது ஒரு மில்லியனராகி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார்.
ஒருவருக்கு அதிர்ஷ்டம் எப்போது, எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. செப்டம்பர் 3ஆம் தேதி அபுதாபியில் வசிக்கும் ஒரு இந்தியருக்கும் இதேபோன்ற ஒன்று நடந்தது. அவரது தலையெழுத்து ஒரே இரவில் மாறியது. அவர் அபுதாபி பிக் டிக்கெட் சீரிஸ் 278இல் 15 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.35 கோடி பரிசை வென்றார். ஜாக்பாட்டில் கிடைத்த பணத்தை, வீடு திரும்பிய பிறகு அதை தனது குடும்பத்துடன் செலவிடுவதாக அவர் கூறினார்.
கலீஜ் டைம்ஸ் செய்தியின்படி, அபுதாபி பிக் டிக்கெட் சீரிஸ் 278இல் சந்தீப் லாட்டரியை வென்றார். இந்த லாட்டரிக்கான குலுக்கல் செப்டம்பர் 3ஆம் தேதியன்று நடைபெற்றது. நியூஸ் போர்ட்டலின்படி, ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று சந்தீப் 20 பேர் கொண்ட ஒரு குழுவுடன் சேர்ந்து 200669 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த டிக்கெட் அவருக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது.
வெற்றி பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் சந்தீப் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தார். பிக் டிக்கெட் தொகுப்பாளர் அவருக்கு போன் செய்து பரிசு வென்றதாக சொன்னபோது, முதலில் அவரால் நம்பவே முடியவில்லை. ஆனால், அவர் அதை வென்றபோது, அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தனக்கு லாட்டரி கிடைக்கும் என்று அவர் ஒருபோதும் நம்பவில்லை. ஆனால், இறுதியில் அதிர்ஷ்டம் அவரது கதவைத் தட்டியது.
ஒரு சிறிய வேலையில் பணிபுரியும் சந்தீப், இப்போது ஒரு மில்லியனராகி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார். இந்தியா திரும்பியதும் இந்தப் பணத்தை வைத்து என்ன செய்வேன் என்பதைப் பற்றி அவர் கூறியுள்ளார். பிக் டிக்கெட்டுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட சந்தீப், பரிசுத் தொகை தனது குடும்பத்தை ஆதரிக்கவும், குறிப்பாக இந்தப் பணத்தை வைத்து தனது தந்தைக்கு சிகிச்சை அளிப்பதாகவும், இந்தியா திரும்பியதும் சொந்தமாகத் தொழில் தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
என் வாழ்க்கையில் முதல்முறையாக, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அவர் கல்ஃப் நியூஸிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நீங்கள் முயற்சி செய்தால், வெற்றி பெறுவீர்கள் என்று தங்களின் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்ப்பவர்களுக்கு ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
சந்தீப், தான் திருமணமானவர் என்றும், தனக்கு இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் இருப்பதாகவும், வெளிநாட்டில் வசித்து வந்தாலும், வீட்டின் முழுப் பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொண்டதாகவும், அவரது தந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததாகவும், இதனால் தான் மிகவும் கவலைப்பட்டு வந்ததாகவும் கல்ஃப் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இப்போது இந்த லாட்டரி தனது குடும்பத்தினரை சிறப்பாக ஆதரிக்கவும், அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும், தனக்கு பலத்தையும், நம்பிக்கையையும் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
September 07, 2025 6:39 PM IST