[ad_1]
Last Updated:
தென்கொரியாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளது.
தென்கொரியாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 74 நாடுகளிலிருந்து 501 வீரர்கள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்திவருகின்றனர்.
இதன் ஆடவர் அணிப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி – பிரான்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. இரு அணி வீரர்களும் சமபலத்துடன் அம்பு எய்த நிலையில் 235-233 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ உள்ளிட்டோரைக் கொண்ட இந்திய அணி, தங்கப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தியது.
இதே போல் கலப்பு அணிப்பிரிவில் இந்திய அணி – நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் 155-157 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி நூலிழையில் தங்கத்தை தவறவிட்டு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
September 07, 2025 6:10 PM IST