[ad_1]
Last Updated:
டிரம்ப், மோடி, விளாடிமிர் புடின், ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை சர்வதேச கவனம் பெற்றது.
சீனாவுடன் இந்தியாவும், ரஷ்யாவும் நெருக்கம் காட்டி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில் அடுத்த மாதம் தென்கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மூவரும் பேச்சுவார்த்தை நடத்தியது சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில் இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் அமெரிக்கா இழந்துவிட்டதாகக் கூறினார்.
இந்தக் கருத்து உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மோடி எப்போதும் தனக்கு நண்பர் தான் என்றும் அவருடன் எப்போதும் நட்புறவுடன் இருப்பேன் எனக்கூறினார். இந்த சூழலில் தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவையும் அமெரிக்கா இழந்து விட்டதாக கருத்து தெரிவித்த டிரம்ப் சீன அதிபரை சந்திக்கவுள்ளதாக வெளியான தகவல் சர்வதேச அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
September 07, 2025 12:02 PM IST
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.. உலக அரசியலில் பரபரப்பு!