[ad_1]
Last Updated:
சிவராஜ் சௌஹான், “ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே நாம் புஷ்பக விமானத்தைக் கொண்டிருந்தோம்” எனப் பேசியுள்ளார்.
பாஜக எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான அனுராக் தாகூர், சமீபத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பி.எம்.ஸ்ரீ பள்ளியில் நடைபெற்ற தேசிய விண்வெளி தின நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அனுராக் தாகூர், “விண்வெளிக்கு முதலில் சென்றது யார்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சில மாணவர்கள், “நீல் ஆம்ஸ்ட்ராங்” எனப் பதிலளித்தனர். இதற்குப் பதில் பேசிய அனுராக் தாகூர், “விண்வெளிக்கு முதன் முதலில் சென்றது அனுமன் ஜி தான் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார். இது பரவலாக விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த விவகாரம் அடங்குவதற்குள் பாஜக மத்திய அமைச்சரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவராஜ் சௌஹான், “ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே நாம் புஷ்பக விமானத்தைக் கொண்டிருந்தோம்” எனப் பேசியுள்ளார்.
போபால், இந்திய அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER) பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சௌஹான், “ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே நாம் புஷ்பக விமானத்தைக் கொண்டிருந்தோம். இன்று நம்மிடம் இருக்கும் ட்ரோன்கள், ஏவுகணைகள் எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடம் இருந்தன. மகாபாரதத்தில் இவற்றை எல்லாம் படித்திருக்கிறோம். நம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வளர்ந்துவிட்டது” எனப் பேசியுள்ளார்.
August 26, 2025 4:59 PM IST