[ad_1]
Last Updated:
பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்படலாம் என கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு இறுதி பொதுக்கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதில் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக ரோஜர் பின்னி செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு 70 வயது நிறைவு பெற்றுள்ளது. பிசிசிஐ விதிகளின்படி 70 வயதுக்கு மேல் யாரும் தலைவர் பொறுப்பில் நீடிக்க முடியாது. 2022 அக்டோபர் மாதம் ரோஜர் பின்னி இந்த பொறுப்புக்கு வந்தார்.
இந்நிலையில், அவரது பதவிக்காலம் விரைவில் முடிந்து விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அடுத்த தலைவரை தேர்வு செய்வது குறித்து இந்த மாத இறுதியில் நடைபெறும் பிசிசிஐ ஆண்டு இறுதி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.
September 06, 2025 9:52 PM IST