[ad_1]
Last Updated:
வரக்கூடிய உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் t20 ஃபார்மெட்டில் நடத்தப்பட உள்ளது
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2 அணிகள் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகள் விளையாடி உள்ள ஆகாஷ் சோப்ரா இன்றைக்கு முன்னணி கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அவரது கருத்துக்களை அறிந்து கொள்வதில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் அவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியைத் தொடங்கியுள்ளது. அடுத்து வரக்கூடிய உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் t20 ஃபார்மெட்டில் நடத்தப்பட உள்ளது.
இதில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவை பொறுத்த அளவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றுள்ளன.
பி பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் உள்ளன. முதலில் லீக் சுற்று நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கக்கூடிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன.
இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் என முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார். இதைப் போன்று இன்னும் சில வீரர்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என கணித்துள்ளனர்.
September 06, 2025 8:02 PM IST