[ad_1]
Last Updated:
BRICS Summit | உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் குற்றம்சாட்டி, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது.
இதேபோல, பிரேசிலில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்க பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில் ’பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாடு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் வரிகளைச் சமாளிப்பதற்கான வழிகள் குறித்து ’பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
September 06, 2025 2:26 PM IST