[ad_1]
Last Updated:
மார்க்சியத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான கார்ல் மார்க்ஸ் நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார்.
லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தைப் பார்வையிட்டது மிகுந்த ஊக்கமளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் அம்பேத்கர் கல்வி பயின்றபோது அவர் தங்கியிருந்த இல்லத்தை நேரில் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவில் சாதியால் ஒடுக்கப்பட்ட இளைஞர், அறிவின் மூலம் உயர்ந்து லண்டனில் மரியாதை பெற்றதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Had the privilege of visiting Dr B.R. Ambedkar House in London, the residence where Babasaheb stayed while pursuing his studies at LSE.
Walking through its rooms, I felt a deep sense of awe. This was where a young man, once suppressed by caste in India, rose through knowledge to… pic.twitter.com/cVn1n1YU2U
— M.K.Stalin (@mkstalin) September 6, 2025
அம்பேத்கர், பெரியார் உரையாடும் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை காண நேர்ந்ததாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் அம்பேத்கர் இல்லத்தில் வியப்பும், மரியாதையும் கலந்த உணர்வு ஏற்பட்டதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
September 06, 2025 2:56 PM IST
“லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தைப் பார்வையிட்டது ஊக்கமளித்தது..” – முதல்வர் ஸ்டாலின்