[ad_1]
கோலாலம்பூர்:
சரவாக், பாலாய் ரிங்கின் (Balai Ringin) பகுதியில், ஜாலான் செரியான்-ஸ்ரீ ஆமான் (Jalan Serian-Sri Aman) சாலையில், நான்கு சக்கர வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூவர் உயிரிழந்தனர்.
மேலும், நால்வர், சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
சரவாக் தீயணைப்பு, மீட்புப் படையின் கூற்றின்படி, வாகனத்தில் இருந்த ஏழு பயணிகளும், மீட்புப் படையினர் வருவதற்கு முன்பே, பொதுமக்களால் வெளியே இழுக்கப்பட்டனர்.
இந்த விபத்தில், 43 வயதுப் பெண்ணும், 75 வயது ஆடவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றும் ஒரு 65 வயதுப் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்த மற்ற நான்கு பேருக்கு, முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.