[ad_1]
Last Updated:
ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர். ரயில் சேவைகள் மற்றும் இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தம்.
ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜம்மு- காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பக்தர்கள் உயிரிழந்தனர். வடமாநிலங்களில் கனமழை, வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்து வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில் கத்ரா என்ற பகுதியில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் உணவருந்தும் இடத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 30 பக்தர்கள் சிக்கி உயிரிழந்த நிலையில் மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். சிலர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவையடுத்து அப்பகுதியில் பக்தர்கள் செல்வது தற்காலிகமாகத் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல பகுதிகளில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
August 27, 2025 4:06 PM IST