[ad_1]
Last Updated:
உங்களுடைய தற்போதைய பொருளாதார நிலையின் அடிப்படையில் இரண்டாவது பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும்.
ஒருமுறை பர்சனல் லோன் வாங்கிவிட்டால் அதனை திருப்பிச் செலுத்தும் வரை மற்றொரு லோனை வாங்க முடியாது என்று பலர் நம்புகின்றனர். ஆனால் உண்மை அது கிடையாது. தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் கடன் வழங்குநர்கள் தனிநபர்களுக்குப் பல்வேறு விதமான பர்சனல் லோன்களை அங்கீகரிக்கிறார்கள். ஆனால் இதற்கு உங்களிடம் வெவ்வேறு விதமான பொருளாதாரத் தேவைகள் இருக்க வேண்டும். உதாரணமாக, மருத்துவமனை பில்கள், வீட்டைப் புதுப்பிப்பது அல்லது கடன்களை ஒருங்கிணைப்பது போன்றவை இதில் அடங்கும்.
கூடுதல் பர்சனல் லோன்களை அங்கீகரிப்பது என்று வரும்போது அந்தக் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்துவதற்கு எந்த அளவுக்கு நம்பிக்கையானவர், முந்தைய கடன்களை திருப்பிச் செலுத்திய வரலாறு, கடன் வருமான விகிதம் போன்ற விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். கூடுதல் EMI தவணையை வழக்கமான முறையில் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு கடன் வழங்குநர்கள் உங்களுடைய வருமானத்தைச் சரி பார்ப்பார்கள். மேலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 750-க்கும் அதிகமாக இருப்பது சிறந்தது. உங்களிடம் ஒரு சிறந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வரலாறு இருந்தால் உடனடியாக உங்களுக்கான கடன் அங்கீகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஏற்கனவே உங்களிடம் வெவ்வேறு பர்சனல் லோன்கள் இருந்தால் இது நேரடியாக உங்களுடைய கடன் சுயவிவரத்தைப் பாதிக்கலாம். ஒவ்வொரு கடன் விண்ணப்பத்தின் போதும் கடன் வழங்குநர் பக்கத்தில் இருந்து ஒரு ஹார்ட் என்குயரி செய்யப்படும். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை கணிசமாகக் குறைக்கும். இது தவிர அதிக கடன்களை வைத்திருப்பதால் உங்களுடைய கடன்-வருமான விகிதத்தில் தாக்கம் ஏற்படும். ஒரு மாதத் தவணையை நீங்கள் செலுத்த தவறினாலோ அல்லது தாமதமாகச் செலுத்தினாலோ அதனால் உங்களுடைய கிரெடிட் ரேட்டிங் உடனடியாகக் குறையும். மேலும் திருப்பி கடன் வாங்கும் போது இதனால் சிக்கல் ஏற்படும்.
இரண்டு அல்லது அதற்கும் அதிகமான பர்சனல் லோன்கள் வாங்குவது என்பது ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான தவணைகளைச் செலுத்த வேண்டிய பொறுப்புடன் வருகிறது. கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீங்கள் நீடித்தால் அது உங்களுடைய மாத EMI-ஐ குறைத்தாலும் நீங்கள் செலுத்தும் மொத்த வட்டி தொகையானது அதிகரிக்கும். ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தைக் குறைத்துக்கொள்ளும் போது உங்களுடைய வட்டி பணம் சேமிக்கப்படும்.
இரண்டாவதாக நீங்கள் வாங்கும் பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் என்பது முதல் பர்சனல் லோனை விட மாறுபட்டதாக இருக்கும். உங்களுடைய தற்போதைய பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே இரண்டாவது பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். முதல் லோன் வாங்கியதால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகரித்திருப்பதை நீங்கள் கவனிக்கும் போது, இரண்டாவது லோனுக்குக் குறைவான வட்டி விகிதம் தரும்படி கடன் வழங்குநரிடம் நீங்கள் பேரம் பேசலாம் அல்லது பர்சனல் லோன்கள் அனைத்தையும் குறைவான வட்டி கொண்ட ஒரே கடனாக ஒருங்கிணைப்பதற்கு ஏதேனும் வழிகள் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட பர்சனல் லோன் வாங்குவது என்பது முற்றிலும் உங்களுடைய தனிப்பட்ட முடிவு. நிலையான வருமானம் மற்றும் சிறப்பான திட்டமிடல் மூலமாக பல்வேறு பர்சனல் லோன்களை உங்களால் நிர்வகிக்க முடியும். ஆனால் உங்களுடைய நீண்ட கால பொருளாதார இலக்குகளில் எந்த ஒரு சமரசமும் செய்யாமல், இந்த மொத்த EMI சுமையையும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் எனும் பட்சத்தில் அடுத்தடுத்த பர்சனல் லோன்களை நீங்கள் வாங்கலாம். இல்லையெனில் இதனால் தேவையில்லாத பொருளாதார அழுத்தம் உண்டாகும்.
September 06, 2025 7:39 AM IST