[ad_1]
Last Updated:
நிச்சயமற்ற உலகளாவிய வர்த்தக கொள்கைகள் ஏற்பட்டுள்ளதற்கு மத்தியில் சுய மரியாதையை பெறுவதும் ஆத்மநிர்பர் பாரத்தின் நோக்கமாக உள்ளது.
ஜி.எஸ்.டி. சீரமைப்பால் அனைத்து பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். நியூஸ் 18 தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் இந்த விபரங்களை அவர் கூறியுள்ளார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிகப்படியான வரி விதித்திருப்பது இரு நாட்டு வர்த்தக உறவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று புதுடெல்லியில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், நான்கு அடுக்குகளுக்கு பதிலாக இனி 5%, 18% என இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், பால், பனீர், பீஸா, பிரட், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த நிலையில் நியூஸ் 18 தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது-
அமெரிக்க அரசால் உயர்த்தப்பட்டுள்ள ஏற்றுமதி வரியால் இந்திய வர்த்தகர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆத்ம நிர்பர் பாரத்தின் நோக்கங்கள் பலவாக உள்ளன.
அனைத்து பொருட்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்வது மட்டுமல்ல இதன் நோக்கம். அத்துடன் நிச்சயமற்ற உலகளாவிய வர்த்தக கொள்கைகள் ஏற்பட்டுள்ளதற்கு மத்தியில் சுய மரியாதையை பெறுவதும் ஆத்மநிர்பர் பாரத்தின் நோக்கமாக உள்ளது.
September 05, 2025 4:11 PM IST
Exclusive : ஜி.எஸ்.டி. சீரமைப்பால் அனைத்து பொருட்களில் விலை குறையும்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்