[ad_1]
Last Updated:
இஸ்ரேல் 40% காசாவை ஆக்கிரமித்ததாகவும், தாக்குதல் தீவிரமாகும் எனவும் தெரிவித்துள்ளது.
காசா நகரத்தின் 40 விழுக்காடு பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் தாக்குதலைத் தீவிரப்படுத்த உள்ளதாகவும் அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 23 மாதங்களாக நடத்தப்பட்டுவரும் இந்தத் தாக்குதலில் இதுவரை 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சுமார் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட பாலஸ்தீன நகரமான காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. காசாவில் பல்லாயிரம் பேர் பட்டினியால் தவித்து வரும் நிலையில் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் பலர் இறந்து வருகின்றனர். காசா நகரமே உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் நீண்டகால செய்தித் தொடர்பாளரான ஹதிஃபா கலோட்டியை கொன்றதையும் இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. இதனிடையே காசாவில் வியாழக்கிழமை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
September 05, 2025 10:14 PM IST
“40% காசாவை ஆக்கிரமித்துவிட்டோம்… தாக்குதல் இன்னும் தீவிரப்படுத்தப்படும்” – இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர்