[ad_1]
Last Updated:
துணை கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்மன் கில், சூப்பர் ஃபார்மில் உள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பிடிப்பதில் சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 8 அணிகள் மோதுகின்றன. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஆசிய அணிகள் தயாராகும் விதமாக இந்த கிரிக்கெட் தொடர் T20 ஃபார்மேட் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.
மொத்தம் உள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக ஏ, பி என பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோதும். இதில் ஏ மற்றும் பி பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய அணியை பொருத்தளவில் ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான அணியில் துணை கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்மன் கில், சூப்பர் ஃபார்மில் உள்ளார். அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால், தொடக்க வீரராக இருந்த சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
சாம்சன் துவக்க ஆட்டக்காரர் இடத்திலிருந்து மாற்றப்படுவாரா அல்லது ப்ளேயிங் லெவனில் இருந்தே நீக்கப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. கேரளா கிரிக்கெட் லீக் போட்டிகளில் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து வந்தார்.
சாம்சனை மிடில் ஆர்டரில் களமிறக்கினால், விக்கெட் கீப்பரான ஜிதேஷ் ஷர்மா அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவரது ஆட்டத்தில் சில நேரங்களில் நிலைத்தன்மை இல்லை. சில போட்டிகளில் சதம் அடித்தாலும், மற்ற நேரங்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விடுகிறார். இதனால் ப்ளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.
September 05, 2025 10:06 PM IST