[ad_1]
Last Updated:
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அடுத்த தலைவராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் பரவி உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு ஏராளமான பெருமைகளை தேடித் தந்துள்ளார்.
52 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 ஆயிரத்து 921 ரன்களும், 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 18 ஆயிரத்து 426 ரன்களும் குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை பாராட்டி அவருக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசு வழங்கி கௌரவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து கிரிக்கெட் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது கிரிக்கெட் வீரர்களையும், கிரிக்கெட் அணிகளையும் பாராட்டி வருகிறார்.
இதனால் சச்சின் குறித்த அப்டேட்களை அவரது ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அடுத்த தலைவராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி செயல்பட்டு வருகிறார். அவருக்கு 70 வயது பூர்த்தி அடைந்துள்ள நிலையில் பிசிசிஐ விதிகளின்படி 70 வயதை கடந்தவர்கள் தலைவர் பொறுப்பில் நீடிக்க முடியாது.
September 05, 2025 2:58 PM IST