[ad_1]
சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டு ஆடவர் ஒருவருக்கு லாட்டரியில் அதிஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டியுள்ளது.
சமீபத்தில் நடந்த மலேசிய சுப்ரீம் டோட்டோ 6/58 என்ற லாட்டரியில் RM73.1 மில்லியன் (S$22.2 மில்லியன்) ஜாக்பாட்டை பரிசை தனி ஒருவராக அவர் வென்றுள்ளார்.
4D லாட்டரியில் டாப் பரிசை தூக்கிய “9999” – இதுவே முதன்முறை
53 வயதுமிக்க தொழில்நுட்ப ஊழியரான அவர், இந்த பிரம்மாண்ட வெற்றி மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரனாக ஆனார்.
இந்த லாட்டரியில் மொத்த பரிசுத் தொகை RM78.5 மில்லியன் (S$23.8 மில்லியன்) ஆகும், பெரும்பான்மையான தொகையை அவரே தட்டி தூக்கினார் என தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஊழியர் சிங்கப்பூரில் பணிபுரிகிறார், மேலும் தாம் வெற்றிபெற்ற தொகையைப் பெறுவதற்காக அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோலாலம்பூருக்கு வந்ததாக தி ஸ்டார் தெரிவித்துள்ளது.
லக்கி பிக் டிக்கெட் எண்களை தேர்வு செய்யாத அவர் அதற்கு பதிலாக, தனது குடும்ப உறுப்பினர்களின் பிறந்த தேதிகளை – 3, 6, 9, 12, 27 மற்றும் 34 – தேர்வு செய்தார்.
வேலைக்காக சிங்கப்பூர் வந்த வெளிநாட்டவர்… அடுத்தவரின் பேச்சை கேட்டு கம்பி எண்ணும் சோகம்
அவர் தேர்வு செய்த அந்த ஆறு எண்களுமே வெற்றிக் எண்ணாக மாறி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
“என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நான் வாயடைத்துப் போனேன். அன்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை” என்று தன் மகிழ்ச்சியை ஊழியர் வெளிப்படுத்தினார்.
“இது உண்மையிலேயே எங்களின் பிராத்தனைக்கு கிடைத்த பதிலாக நான் நினைக்கிறேன்” என்றார்.
இந்த வெற்றித் தொகையை பயன்படுத்தி தனது வீட்டுக் கடனைத் அடைக்கவும், மீதமுள்ள தொகையை தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகச் சேமிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.