[ad_1]
Last Updated:
US Tax Hike | ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் மீன்வளம் குறைவு, இலங்கை கடற்படை பிரச்சினை போன்ற பல்வேறு பாதிப்புகளை மீனவர்கள் சந்தித்து வரும் வேளையில், இதுபோன்ற வரிவிதிப்பால் உரிய விலை கிடைக்காமல் ஏற்றுமதி பாதிப்படையும் எனவும் ஏற்றுமதியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீன்கள் மீது 50 சதவீதம் வரி உயர்வால், இறால் மீனின் விலை வீழ்ச்சி அடைந்து மீன்பிடி தொழில் பாதிப்படைவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் இறால் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பாம்பன், மண்டபம், மூக்கையூர் போன்ற பகுதி மீனவர்களால் பிடிக்கப்படும் இறால் மீன்கள் மற்றும் பண்ணை இறால்கள் இங்கிருந்து வியாபாரிகள் மூலம் தூத்துக்குடி அனுப்பப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து 50 சதவீத இறால் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீன்களுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இறால் ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பிற்கு முன்னதாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு 2.29 சதவீதம் மற்றும் 5.77 சதவீதம் வரி இருந்தது. தற்போது 50 சதவீதம் வரி உயர்த்தப்பட்டு கிட்டத்தட்ட 60 சதவீதம் வரி உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் மீன்வளம் குறைவு, இலங்கை கடற்படை பிரச்சினை போன்ற பல்வேறு பாதிப்புகளை மீனவர்கள் சந்தித்து வரும் வேளையில், இதுபோன்ற வரிவிதிப்பால் உரிய விலை கிடைக்காமல் ஏற்றுமதி பாதிப்படையும் எனவும் ஏற்றுமதியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு இறால் மீன்களுக்கு உரிய ஆதார விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மீனவர்கள், ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர்.
September 05, 2025 10:07 AM IST