[ad_1]
Last Updated:
நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு ஒரு தனித்துவமான இரு தரப்புக்கும் லாபம் தரக்கூடிய சூழலை உருவாக்கும்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இன்று அறிவிக்கப்பட்ட புதிய மாற்றங்களை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வரவேற்றுள்ளது. இந்திய மக்களுக்கு தீபாவளி பரிசை பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்று ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ன்று புதுடெல்லியில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், நான்கு அடுக்குகளுக்கு பதிலாக இனி 5%, 18% என இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், பால், பனீர், பீஸா, பிரட், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வரி விகித சீரமைப்பை ரிலையன்ஸ் நிறுவனம் வரவேற்றுள்ளது. இது தொடர்பான அதன் சேர்மன் முகேஷ் அம்பானி விடுத்துள்ள அறிக்கையில், நுகர்வு சார்ந்த வளர்ச்சிக்கு இந்த ஜிஎஸ்டி சீரமைப்பு ஒரு பெரிய ஊக்கமாக அமையும். ஜிஎஸ்டி எளிமைப்படுத்தல் குறைந்த விலையில் நுகர்வோருக்கு பயனளிக்கும்.
“இந்திய மக்களுக்கு தீபாவளி பரிசு” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்க பாராட்டுக்கள். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8% ஐ எட்டியுள்ள நிலையில், புதிய சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தை மேலும் துரிதப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இது வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கங்களுக்கு அருகில் கொண்டு செல்கிறது என்று தெரிவித்தார்.
இதேபோன்று ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக பிரிவன் தலைவர் இஷா அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக, வீட்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த ஜிஎஸ்டி மாற்றங்கள் உள்ளன.
இது தொழில்துறைக்கு இணக்கத்தை எளிதாக்கும், மேலும் நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு ஒரு தனித்துவமான இரு தரப்புக்கும் லாபம் தரக்கூடிய சூழலை உருவாக்கும்.
September 04, 2025 9:43 PM IST
இந்திய மக்களுக்கு தீபாவளி பரிசை வழங்கிய பிரதமர் மோடி.. ஜி.எஸ்.டி. மாற்றங்களுக்கு ரிலையன்ஸ் வரவேற்பு