[ad_1]
அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகள் தொடர்பாக 2020 முதல் இந்த ஆண்டு ஜூலை வரை திறக்கப்பட்ட விசாரணை ஆவணங்களில் மூன்றில் இரண்டு பங்கு “மேலும் நடவடிக்கை இல்லை” (NFA) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் (AGC) தரவுகளை மேற்கோள் காட்டி, பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் அசலினா ஓத்மான் சைட், இது போன்ற 60 வழக்குகளில் 41 வழக்குகள் NFA ஆகக் கருதப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இருப்பினும், எதிர்காலத்தில் சூழ்நிலைகள் மாறினால், NFA என வகைப்படுத்தப்பட்ட வழக்குகள்குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
“சிவில் வழக்குகளைப் போலன்றி, குற்றவியல் வழக்குகள் எந்த வரம்பு காலத்திற்கும் உட்பட்டவை அல்ல”.
“எனவே, எதிர்காலத்தில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டால், இந்த வழக்குகள்குறித்து மேலும் விசாரணை மற்றும் மறுஆய்வு மேற்கொள்ளப்படலாம்,” என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலில் கூறினார்.
NFA வகைப்பாடு அரசியல் பரிசீலனைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகச் செயல்படுத்தப்பட்ட வழிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்கள் குறித்த புள்ளிவிவரங்கள் மற்றும் விவரங்களைக் கோரிய செனட்டர் ஹுசின் இஸ்மாயிலின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக அசாலினா இவ்வாறு கூறினார்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபரின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், காவல்துறையின் விசாரணை ஆவணங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஏஜிசி முழுமையாக ஆய்வு செய்யும் என்று அமைச்சர் தனது பதிலில் உறுதியளித்தார்.
“உண்மைகள், சான்றுகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது, நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வழக்குத் தொடர்வதற்க்கான சுதந்திரம் ஆகியவற்றின் கொள்கைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.