Last Updated:
ஜப்பான் அணி இடைவேளைக்குப் பிறகு ஒரு கோல் அடித்து, ஆட்டம் இந்தியா 2 – ஜப்பான் 1 என்ற நிலைக்கு சென்றது.
பீகாரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணியை இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரில் 2 ஆவது வெற்றியை பதிவு செய்தது.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. ஹாக்கி போட்டியை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த தொடரை இலசமாக ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டு டிக்கெட்டுகள் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.
இந்திய அணி தனது தொடக்க போட்டியில் சீனாவை வென்றிருந்தது. இந்த சூழலில் ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா இன்று களம் கண்டது.
போட்யின்போது இந்தியாவின் மன்தீப் சிங் முதல் கோலை அடித்து ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.
ஜப்பான் அணி இடைவேளைக்குப் பிறகு ஒரு கோல் அடித்து, ஆட்டம் இந்தியா 2 – ஜப்பான் 1 என்ற நிலைக்கு சென்றது. மீண்டும், ஹர்மன்பிரீத் சிங் தனது இரண்டாவது கோலை அடித்து, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். ,
இதன் மூலம் ஆசிய ஹாக்கி தொடரில் தொடர்ந்து 2 ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது.
August 31, 2025 6:09 PM IST


