கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சினைகளை வலியுறுத்தி நாளை(14) கறுப்பு சித்திரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கல்முனை வடக்குப் பிரதேசத்தை தனியான பிரதேச செயலகமாக தரம் உயர்த்தி தருமாறு வலியுறுத்தியும், பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் அங்குள்ள பொதுமக்கள் 20 ஆவது நாளாக இன்று(13) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கறுப்பு சித்திரை அனுஷ்டிப்பு
இந்நிலையில், சித்திரை புதுவருட தினத்தை கல்முனை வடக்கு பிரதேச மக்கள் நாளை(14)கறுப்பு சித்திரையாக அனுஷ்டித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.

கல்முனை வடக்கு பிரதேச சிவில் அமைப்புக்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், நாளை (14) காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகும் கறுப்பு சித்திரை அனுஷ்டான நிகழ்வுகளில் இளைஞர் கழகங்கள்,விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் மோட்டார் சைக்கிள்களில் பவனி நடைபெறவுள்ளது.
அதனையடுத்து பொதுமக்களின் பங்களிப்புடன் கறுப்பு சித்திரை பொங்கல் பொங்குதல் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
இவற்றிற்கு மேலதிகமாக பறை இசை போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

&w=1200&resize=1200,675&ssl=1)