நாட்டு வாழை, ஒட்டு வாழை, முப்பட்டை, பச்சை, ரஸ்தாளி, பூவன் என பல்வேறு ரகங்கள் இருந்தாலும் இப்பகுதியில் நாட்டு மற்றும் ஒட்டு வாழையே அதிகளவு பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் முகூர்த்த நாட்களை கணக்கிட்டே விவசாயிகள் வாழை பயிரிடுகின்றனர். கடந்தாண்டு அக்டோபர், நவம்பரில் வாழை நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு தற்போது அறுவடை காலம், தொடங்கியுள்ளது.


