Last Updated:
ரக்ஷிதாவிற்கும் அவரது உறவுக்கார் இளைஞரான சித்தராஜு என்பவருடன் திருமணம் கடந்த உறவில் இருந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே காதலியின் வாயில் வெடி மருந்தை திணித்து வெடிக்க வைத்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தை ஹுன்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான ரக்ஷிதா. இவருக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கு திருமணம் நடைபெற்றது. இதனிடையே ரக்ஷிதாவிற்கும் அவரது உறவுக்கார் இளைஞரான சித்தராஜு என்பவருடன் திருமணம் கடந்த உறவில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் ஹிர்யா என்ற கிராமத்தில் உள்ள லாட்ஜில் இருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சித்தராஜு தான் மறைத்து வைத்திருந்த வெடி மருத்தை ரக்ஷிதாவின் வாயில் திணித்து வெடிக்க வைத்துள்ளார்.
இதில், ரக்ஷிதாவின் முகம் முழுவதும் வெடித்து சிதறி அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து சித்தராஜு அங்கிருந்து தப்பியோட முயன்ற நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
லாட்ஜ் அறையில் ரத்த வெள்ளத்தில் இருந்த ரக்ஷிதாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதலியின் வாயில் வெடி மருந்தை திணித்து வெடிக்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
August 26, 2025 1:29 PM IST


