• Login
Thursday, April 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய கோப்பை 2025 : இந்திய அணியில் இந்த முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 12, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆசிய கோப்பை 2025 : இந்திய அணியில் இந்த முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 12, 2025 3:43 PM IST

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன், யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கும் விளையாட வாய்ப்பு வழங்கப்படும்

இந்திய அணிஇந்திய அணி
இந்திய அணி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், முக்கிய வீரர்கள் சிலருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத சூழலில் இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தொடரை சமன் செய்திருப்பது பாராட்டுகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த போட்டி தொடருக்கு தயாராகி வருகிறது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான உடல் தகுதி தேர்வுகள் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பல்வேறு சிகிச்சைகளால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆசிய கோப்பை தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் போது காயம் அடைந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு கூடுதல் ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சில காலம் ஓய்வில் இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு மீண்டும் திரும்ப உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

இதேபோன்று ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன், யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கும் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி இம்மாத இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 12, 2025 3:43 PM IST

Read More

Previous Post

யானைக்கு அருகில் செல்பி எடுத்த நபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்.. வனத்துறை அதிரடி நடவடிக்கை! | இந்தியா

Next Post

ஆடி கடைசி செவ்வாய்… தோவாளை மலர் சந்தையில் விறுவிறுவென விலையேறிய பூக்கள்… | வணிகம்

Next Post
ஆடி கடைசி செவ்வாய்… தோவாளை மலர் சந்தையில் விறுவிறுவென விலையேறிய பூக்கள்… | வணிகம்

ஆடி கடைசி செவ்வாய்... தோவாளை மலர் சந்தையில் விறுவிறுவென விலையேறிய பூக்கள்... | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin