2021 ஐபிஎல் தொடருக்காக அணிகள் தயாராகி வருகிறது. இந்த தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்க உள்ளது.
கொல்கத்தா அணியில் இருக்கும் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி ஆகியோரை நீக்க கூடாது என்று இயான் மோர்கன் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
2021 ஐபிஎல் தொடருக்காக அணிகள் தயாராகி வருகிறது. இந்த தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்க உள்ளது.
இந்த ஏலம் மிகவும் சிறிய அளவில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொறு அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நேற்று அணியில் இருந்து விடுவித்தது.
இந்த நிலையில் கொல்கத்தா அணியில் இருக்கும் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி ஆகியோரை நீக்க கூடாது என்று இயான் மோர்கன் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
ஒரு சில வீரர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். டாம் பான்டன், கிறிஸ் கிரீன், நிகில் நாயக், சித்தார்த் எம், சித்தேஷ் லாட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா அணியில் 11 இந்திய வீரர்கள் 7 வெளிநாட்டு வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன், நிதிஷ் ராணா, சுப்மான் கில், ரிங்கு சிங் , ராகுல் திரிபாதி , கமலேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், லோகி பெர்குசன், பாட் கும்மின்ஸ் , பிரசித் கிருஷ்ணா, சந்தீப் வாரியார்ஆகியோர் அணியில் தொடர்வார்கள்.
கொல்கத்தா அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் விடுவிக்கப்படுவார் என்று நிறைய பேர் கூறிய நிலையில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட வாய்ப்பே இல்லை என்று கொல்கத்தா அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. அதேபோல் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வருண் சக்ரவர்த்தியையும் கொல்கத்தா அணி தக்க வைத்துள்ளது .
இவர்கள் இருவரும் முக்கியமான வீரர்கள், இவர்களை ரிலீஸ் செய்ய கூடாது என்று இயான் மோர்கன் கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் பேசி இருக்கிறார். இதன் காரணமாகவே தற்போது கொல்கத்தா அணியில் இவர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக் – இயான் மோர்கன் இடையிலான நட்பு எப்போதும் போல தொடர்கிறது என்றும் கூறுகிறார்க்ள.