குவாந்தன்:
கடந்த சனிக்கிழமையன்று கெந்திங் மலையில் உள்ள கெந்திங் சூதாட்ட மையத்தில் நடந்த கலவரம் தொடர்பில் எட்டு நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளதுடன், கண்காணித்தும் வருகின்றனர்.
குறித்த சூதாட்ட மையத்திலிருந்த CCTV யினை ஆய்வு செய்ததன் விளைவாக, அனைத்து ஆண்களும் கண்டறியப்பட்டதாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அவர்களில் லிம் யோங் சென், 43, தாமான் கெம்பாஸ் உத்தாமா; தே கிம் டார், 44, தாமான் ஶ்ரீ லாலாங், கோத்தா திங்கி, ஜோகூர்; ஜோகூரில் உள்ள தாமான் டேசா கெம்பாஸ் நகரைச் சேர்ந்த ஓங் ஜுன் சுவான், 39, சிலாங்கூர், கிள்ளான், தாமான் பாயு பெர்டானாவைச் சேர்ந்த 23 வயதான இவான் கோ ஜென் யீ.
மேலும் கோர் சூன் டிட், 24, இவரின் முகவரி தாமான் பாகாப் இண்டா, சுங்கை பகாப், பினாங்கு; ஸ்வே காஹ் ஃபாய், 25, பாசீர் போக்கோக், பாங்கோர் தீவு, பேராக்; டான் சுன் ஹௌ, 22, தாமான் இம்பியன் இண்டா அல்மா, புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு மற்றும் சிலாங்கூர் பாண்டன் ஜெயாவைச் சேர்ந்த ஹோஸ் யின் பின், 46 ஆகியோர் என அவர் கூறினார்.




