புக்கிட் பாத்தோக்கில் உள்ள வேலையிடத்தில் உயரத்தில் இருந்து இந்திய ஊழியர் ஒருவர் கீழே விழுந்தார் என்ற தகவல் இணையத்தில் பரவிவருகிறது.
அது SSH தெங்கா C8 திட்டம் நடைபெறும் வேலையிடம் என்றும் வலைத்தளங்களில் கூறப்படுகிறது.
வீர தீர செயல் புரிந்த தமிழ்நாட்டு ஊழியர்கள்… நினைவு பரிசு வழங்கி வாழ்த்திய சிங்கப்பூர் அதிபர்!
அவர் 4ஆம் தளத்தில் இருந்து கீழே விழுந்தார் என்றும் பின்னர் சுயநினைவுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர் தற்போது எப்படி உள்ளார் என்ற தகவல் தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான பதிவு, Bangladeshi In Singapore என்ற Facebook பக்கத்தில் வெளியானது.
அதில் SSH தெங்கா C8 திட்டம் நடைபெறும் வேலையிடத்தில் இந்திய ஊழியர் கீழே குதித்தார் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இது உண்மையா என்று இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
மதிப்பாய்வின் போது உயரத்தில் (4 ஆம் மாடி) இருந்து கீழே ஒருவர் விழுந்தார் என்று HSE என்ற Facebook பக்கம் கூறியுள்ளது.
அந்த பதிவில், தன்னை சக ஊழியர் என்று சொல்லிக்கொள்ளும் ஆடவர் ஒருவர் அவர் த@கொ*லை முயற்சி செய்தார் என கமெண்ட் செய்தார்.

மேலும் அது குடும்ப பிரச்சனையாக கூட இருக்கலாம் எனவும் அவர் சொன்னார்.
அந்த பதிவுகளில் வெளியான புகைப்படங்களில் ஆடவர் கீழே விழுந்து கிடப்பதை காண முடிகிறது.
இந்த சம்பவம் குறித்து உண்மை தகவலை கேட்டுள்ளோம், உறுதியான தகவல் பின்னர் வெளியிடப்படும்.
நீண்ட கூந்தலுடன், முகமற்ற உருவம்… தெலோக் பிளாங்காவில் நள்ளிரவில் தோன்றிய உருவம் – பதறிய குடும்பம்
Photo: HSE /Facebook

