பிரிவு 54 – குடியிருப்பு சொத்துகளில் மீண்டும் முதலீடு செய்வது
இந்த பிரிவின் கீழ், நீங்கள் ஒரு வீடு அல்லது நிலத்தை விற்று, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை, இந்தியாவில் புதிய வீடு அல்லது சொத்தில் மீண்டும் முதலீடு செய்தால், அந்த லாபத்திற்கு வரி விதிக்கப்படாது.
- புதிய சொத்தை விற்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு அல்லது விற்ற 2 ஆண்டுகளுக்குப் பிறகு வாங்க வேண்டும்.
- விற்பனைத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் புதிய வீடு கட்டும் பணியை முற்றிலுமாக முடித்திருக்க வேண்டும்.
- இந்த வரி விலக்கு வீடு போன்ற ஒரு குடியிருப்பு சொத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், நீங்கள் பெற்ற லாபம் ரூ.2 கோடிக்கு குறைவாக இருந்தால், ஒரே ஒருமுறை மட்டும், இரண்டு வீடுகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
- அதுவே, புதிய வீட்டை வாங்கிய பிறகு, 3 ஆண்டுகளுக்குள் அதை விற்றால், வரி விலக்கு ரத்து செய்யப்படும் மற்றும் அதற்கான வரி மீண்டும் வசூலிக்கப்படும்.
விலக்கு பெற்ற தொகையில் எது குறைவாக இருக்கிறதோ அது மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்:
- விற்பனையில் இருந்து கிடைக்கும் மூலதன ஆதாயம் அல்லது புதிய வீட்டில் முதலீடு செய்த தொகை (மூலதன ஆதாய கணக்கில் வைக்கப்பட்ட தொகையுடன்) ஒப்பிட்டு கணக்கில் கொள்ளப்படும்.
- 2023 ஏப்ரல் முதல், புதிய வீட்டின் மதிப்பு ரூ.10 கோடியை தாண்டினால், அந்த அளவை மீறிய தொகை வரிவிலக்குக்குப் பொருத்தமாக கருதப்படாது. அதாவது, ரூ.10 கோடி வரை மட்டுமே முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு வரிவிலக்கு வழங்கப்படும்.
பிரிவு 54F – குடியிருப்பு அல்லாத சொத்துகளை விற்றால்
நீங்கள் நிலம், பங்குகள், வணிக இடம் போன்ற குடியிருப்பு அல்லாத சொத்தை விற்றிருந்தால், அந்த லாபத்தில் இருந்து வரி விலக்கு பெற, முழு தொகையையும் ஒரு புதிய குடியிருப்பு வீட்டில் முதலீடு செய்ய வேண்டும்.
- விற்பனைக்குப் பிறகு 2 ஆண்டுகளுக்குள் வாங்கவோ அல்லது 3 ஆண்டுகளுக்குள் கட்டவோ வேண்டும்.
- விற்பனை நேரத்தில், உங்கள் பெயரில் ஒரே ஒரு குடியிருப்பு வீடு மட்டுமே இருக்க வேண்டும்.
- முதலீட்டுக்குப் பிறகு, வேறு ஒரு வீடு வாங்கவோ அல்லது கட்டவோ கூடாது.
விலக்கு விகிதாசாரமாக கணக்கிடப்படும்:
விலக்கு = (புதிய வீட்டில் முதலீடு செய்யப்பட்ட தொகை ÷ நிகர விற்பனைத் தொகை) × மூலதன ஆதாயம்
புதிய வீடு ரூ.10 கோடியைத் தாண்டினால், மேற்பட்ட தொகைக்கு விலக்கு கிடையாது.
முக்கிய குறிப்புகள்:
- முதலீடு சம்பந்தப்பட்ட அனைத்து ரசீதுகள், ஒப்பந்தங்கள், பதிவுகள் போன்றவை சரிவரப் பதிந்திருக்க வேண்டும்.
- முதலீட்டை உடனே செய்ய முடியாவிட்டால், மூலதன ஆதாய வைப்பு கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
- அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
இவ்வாறாக, “திட்டமிட்ட முதலீடு மூலமாக, சட்டப்பூர்வமாக லட்சக்கணக்கான வரிகளை சேமிக்க முடியும்” என்று வரி நிபுணர் டாக்டர் சுரேஷ் சுரானா கூறுகிறார். எனவே, பிரிவு 54 மற்றும் 54F ஆகியவை, வீட்டை விற்கும் சந்தர்ப்பங்களில் பெரும் வரி சுமையிலிருந்து தப்பிக்க ஒரு சட்டரீதியான வழியாக இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவதால், ஒவ்வொன்றையும் கவனமாகப் பின்பற்ற வேண்டியது அவசியம். இதில், ஏதேனும் சந்தேகம் இருந்தால், தகுந்த வரி நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை பொது தகவலுக்காக மட்டுமே. எந்தவொரு முதலீடு பற்றிய முடிவையும் எடுப்பதற்கு முன்பு, சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகரை அணுகவும்.
August 03, 2025 3:38 PM IST
வீட்டை விற்கப் போறீங்களா…? லட்சக்கணக்கில் செலுத்த வேண்டிய வரியை மிச்சப்படுத்துவது எப்படி…? – எளிய வழிமுறைகள்…

