இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவித்ததற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரளாவின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கிலும், வகுப்புவாத பிரிவை விதைக்கும் எண்ணத்திலும் தவறான தகவலை இப்படம் பரப்பியதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் படத்திற்கு விருது கொடுத்ததன் மூலம், சங் பரிவாரின் பிளவுப்படுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய கதைக்கு, சட்டப்பூர்வ அங்கீகாரத்தை விருதுக்குழு கொடுத்திருப்பதாக விமர்சித்துள்ளார்.