கோலாலம்பூர்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) ஊழல், அரசுப் பணப் போக்குகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை எதிர்த்து தொடர்ந்து போராடும் விதமாக, தங்களது நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளது.
பிரதமர் நேற்று நாடாளுமன்றத்தில் வழங்கிய 13வது மலேசியத் திட்டத்தின் (13MP) வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக MACC தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
அதில், செயல்பாட்டு திறன் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் ஃபோரென்ஸிக் விசாரணைகளை வலுப்படுத்தல், சொத்துக்கள் மீட்பு நடவடிக்கைகள், ஊழல் தடுப்பு முன்னெச்சரிக்கைகள் என பல முக்கிய முயற்சிகள் அடங்கும் என்றார் அவர்.
“மலேசியாவை ஊழலில்லா நாடாக மாற்ற வேண்டும் என்ற மக்கள் எதிர்பார்ப்பை MACC நன்கு புரிந்துள்ளது. நாட்டு மக்களின் நலனுக்காக நாங்கள் இந்த பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவோம்.
மேலும், மக்கள் மத்தியில் நல்ல நடத்தை மற்றும் நேர்மையை ஊக்குவிக்கவும் MACC கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் பொறுப்புள்ள, ஒழுக்கமான குடிமக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
நாட்டின் நாடாளுமன்றம், அரசாங்கம், மற்றும் மக்கள் உடனான ஒத்துழைப்பின் மூலம் சமூக-சார்ந்த வளர்ச்சியை சீராக மேற்கொண்டு, நாட்டு மக்களுக்கு சமமற்ற நன்மைகளை வழங்கும் நோக்கத்துடன் இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.