ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான டியூஷன் வகுப்புகளை ஆகஸ்ட் 6 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு பரீட்சை முடியும் வரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்திகளுக்கு டியூஷன் வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்துதல், சிறப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பட்டறைகள் நடத்துதல், மேற்படி தேர்வுக்கான யூக வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், மற்றும் தேர்வுத் தாள்களில் கேள்விகள் அல்லது அதுபோன்ற கேள்விகள் வழங்கப்படும் என்று கூறும் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள், மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடுதல் அல்லது அத்தகையவற்றை வைத்திருத்தல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று திணைக்களம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.